Tuesday, February 28, 2012

IPSBU FELICITATE HIS BEATITUDE CARDINAL GEORGE ALENCHERRY


20/02/2012 ம் நாள் அன்று IPSBU இந்தியாவிலிருந்து புதியதாக நியமிக்க பட்ட கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி அவர்களை வாழ்த்தியது. 


இந்த நிகழ்வில் பேசிய கர்தினால் அவர்கள் தமிழ் மொழியானது மிகவும் பழமை வாய்ந்த்து என்றும், மிகவும் இனிமை வாய்ந்த்து என்றும், பல ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் தமிழ் மொழி கலப்படம் இல்லாமல் திகழ்கிறது என்றும் கூறினார். குறிப்பாக கால தேவைக்கேற்ப “கணிபொறி, பேருந்து, சிற்றுந்து, கைபேசி” என்ற புதிய வார்த்தைகளை உருவாக்கி கலப்படமின்றி தூய மொழியாக திகழ்கிறது என்று தமிழ் மொழியின் சிறப்பினை பற்றி புகழ்ந்து பேசினார்கள்.


மேலும் கர்தினால் அவர்கள் 1997 முதல் 2011 வரை தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள தக்கலை ( சீரோ – மலபார்) மறைமாவட்டத்தின் ஆயராக பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.










No comments:

Post a Comment