குறிஞ்சி நிலம்
"சேயோன் மேய மைவரை உலகமும்" - தொல்காப்பியம்.
குறிஞ்சி நிலம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில்ஒன்றாகும். மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி என அழைக்கப்படுகின்றன. குறிஞ்சி நிலத்திற்கு முருகன்குலதெய்வமாக பண்டைய மக்களால் வழிபடப்பட்டார். குறிஞ்சி நிலத்து ஊர்கள் சிறுகுடி, பாக்கம் என்று அழைக்கப்பட்டன.
குறிஞ்சி நிலத்தின் பொழுதுகள்
கூதிர், முன்பனி என்னும் பெரும் பொழுதுகளும் யாமம் என்னும் சிறுபொழுதும் குறிஞ்சி நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.
குறிஞ்சி நிலத்தின் கருப்பொருட்கள்
குறிஞ்சி நிலத்தின் உரிப்பொருட்கள்
v அக ஒழுக்கம் : புணர்தல்