"வருணன் மேய பெருமணல் உலகமும்" - தொல்காப்பியம்
நெய்தல் நிலம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில்ஒன்றாகும். கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல் என அழைக்கப்படுகின்றன. நெய்தல் நிலத்தலைவர்கள் கொண்கன், சேர்ப்பன், துறைவன், புலம்பன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர்.
நெய்தல் நிலத்தின் பொழுதுகள்
கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பெரும் பொழுதுகளும் வைகறை, எற்பாடு என்னும் சிறுபொழுதும் நெய்தல் நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.
நெய்தல் நிலத்தின் கருப்பொருட்கள்
v மக்கள்: சேர்ப்பன், நுளைச்சி, நுளையர், பரதவர், பரத்தியர்
நெய்தல் நிலத்தின் உரிப்பொருட்கள்
v அக ஒழுக்கம் : இரங்கல்
புற ஒழுக்கம் : தும்பை