மருதம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என அழைக்கப்பட்டது. இதனால் மருத நிலத்தில் வாழ்ந்தோர் உழவுத் தொழில்புரிவோராவர். மருதநில மக்கள் மள்ளர் எனப்பட்டனர், மருத நிலத்தலைவர்கள் மகிழ்நன், ஊரன் என்று அழைக்கப்பட்டனர்.
"வேந்தன் மேய தீம்புனல் உலகமும்" - தொல்காப்பியம். இவ்வாறு தொல்காப்பியம் மருதநில கடவுளாக வேந்தனை கூறுகிறது. ஆனால் பிற்கால நூல்கள் இந்திரனை மருதநில கடவுளாக கூறுகிறது. வேந்தனே ஆரிய கலப்பினால் இந்திரனாக மாறியிருப்பதாக தமிழ் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
"செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப"-பிங்கல நிகண்டு. இவ்வாறு பிங்கல நிகண்டுமள்ளரை மருதநில மக்களாக கூறுகின்றது.
மருத நிலத்தின் பொழுதுகள்
கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பெரும் பொழுதுகளும் வைகறை, விடியல் என்னும் சிறுபொழுதுகளும் மருத நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.
மருத நிலத்தின் கருப்பொருட்கள்
v உணவு: செந்நெல், வெண்நெல்
v தொழில்: களைகட்டல், நெல்லரிதல், கடாவிடல்
மருத நிலத்தின் உரிப்பொருட்கள்