" மாயோன் மேய காடுறை உலகமும்" – தொல்காப்பியம்
முல்லை என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். செம்மண் பரந்திருத்தலால் முல்லை நிலமானது செம்புலம் எனவும் அழைக்கப்பட்டது. இந்நிலம் முல்லை மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது.
முல்லை நிலத்தின் பொழுதுகள்
கார் என்னும் பெரும் பொழுதும் மாலை என்னும் சிறுபொழுதும் முல்லை நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.
முல்லை நிலத்தின் கருப்பொருட்கள்
v பறை : ஏறுகோள்
v தொழில்: சாமை, வரகு விதைத்தல், களை எடுத்தல், குழலூதல், ஏறு தழுவல், குரவைக் கூத்தாடல், மந்தை மேய்த்தல்
v ஊர்: பாடி,சேரி
முல்லை நிலத்தின் உரிப்பொருட்கள்
v அக ஒழுக்கம் : இருத்தல்
புற ஒழுக்கம் : வஞ்சி