ஒருவேளை நீ கார்மேகத்தில் சூழ்ந்திருந்தாயோ
வெண்மைக்கு நீ வெளிச்சம் கொடுத்தாயோ
வன்மைக்கும் நீ விருச்சிகம் அகிடுவாயே !
ஏனெனில், வெண்பனியே !
உன்னைக்கண்டு மயங்காத மனிதரும் இல்லை
உன்னைக்கண்டு கலங்காத மரமும் இல்லை
உலகுக்கெல்லாம் ஒளிர்ந்திடும் சூரியன்
உன்னைக்கண்டால் ஒதிங்கி ஓடுகிறான்
உந்தன் வெண்மை முழுமை என்பதால்
உன்னைக்கண்ட வெப்பநிலை "௦0" வாகிறது
உந்தன் வெண்மை உலகுக்கு கண்மை
உந்தன் பன்மை பலருக்கு நன்மை
நன்மைக்கு நவச்சாரம் அளித்திடு
நல்லவனுக்கு நமஸ்காரம் செலித்திடு
உன்னை வெண்மையாக்கிய இறைவன்
உன்னை கவிதையாக்கிய கவிஞனல்ல- மாறாக
ஏழ்மையே வாழ்வின் தேவை
தூய்மையே வாழ்வின் பாதை
அன்பே அகிலத்தை வெல்லும்
புனிதமே உலகத்தை காக்கும்- என்று
வாழ்ந்துகாட்டிய அகிலத்தின் தலைவன்
ஒரு ஆனமானவன் இயேசுபிரான் !!!
ஒரு அன்பின் பணியாளன்
அந்தோணிசாமி
No comments:
Post a Comment