Friday, February 10, 2012

உணவாக உறவாக


உணவை கொடுப்போம் மனித உயிரை காப்போம்
உணர்வை பகிர்வோம் மனித உறவை வளர்ப்போம்! - ஆம் 
தமிழனின் வாழ்வில் மகிழ்வை கொணர 
தாயகம் முழுதும் உயர்வினைக்கொணர !!
விளைச்சலின் பயணம் நெல் மணியைக்கொண்டு 
உள்ளம் மகிழ்ந்து உறவினருடன் இணைந்து 
உணவாக  சமைத்து உறவினை வளர்க்க 
உண்டு மகிழும் நாள் இதுவே !!!
விளைச்சலின்  பயனில் வெற்றியின் மகிழ்ச்சியில் 
கடவுளுக்கு நன்றி சொல்லும் இனிய பொங்கல் நாள் இதுவே !!!!

மண் பானையில் பொங்கல் வைப்பது தமிழனின் சிறப்பு - அதில் 
மஞ்சள் கொத்தை சுற்றிக்கட்டுவது அதனினும் சிறப்பு !

வீட்டு முற்றத்தில் அனைவரும்  கூடி  
ஊரே அதிரும் அளவிற்கு கொலவையிட்டு 
அன்பு உணர்வு கொண்டு ஆர்வமுடன் பொங்கல் வைக்கும் 
தமிழ் மக்களே உங்கள் பிறப்பே நம் மண்ணின் சிறப்பு !!!

குடும்பமாக பொங்கல் வைப்பது விளைச்சலின் சிறப்பு 
வைத்த பொங்கலை பசித்தவர்க்கு கொடுப்பது படைதவற்கே சிறப்பு !!- ஆம் 
விளைச்சலின் பயனை வீட்டிலே போர்த்திவைக்காமல் 
காட்டிலே கொட்டி தீர்க்காமல், ஏட்டிலே எழுதிக்காட்டாமல் 
ரோட்டிலே புட்டி பாலுக்காக ஏங்கும் 
தொட்டில் குழந்தைகளுக்கு ரொட்டி துண்டாக மாற்றிக்காட்டுவோம்  !!!
உணவைக்கொடுத்து உறவை வளர்துக்காட்டுவோம் !!!!

பொங்கல் அன்று பால் பொங்குவது போல் 
தங்கள் உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும் ! 
பொங்கலோ பொங்கல் என்று பாடிடுவோம் 
நீங்களே நாங்கள் என்று வாழ்ந்திடுவோம் ! 
வாழ்க வளமுடன் என்று வாழ்த்திடுவோம் - தினம் 
உழைப்பே உயர்வு என்று முயன்றிடுவோம் !! 

அந்தோனி சாமி
அன்பின் பணியாளன்

No comments:

Post a Comment