"வருணன்
மேய பெருமணல் உலகமும்" தொல்காப்பியம்
நெய்தல்
நிலம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல் என அழைக்கப்படுகின்றன. நெய்தல் நிலத்தலைவர்கள் கொண்கன், சேர்ப்பன், துறைவன், புலம்பன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர். கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பெரும் பொழுதுகளும் வைகறை, எற்பாடு என்னும் சிறுபொழுதும் நெய்தல்
நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.
நெய்தல் நிலத்தின் கருப்பொருட்கள்
கடவுள்
|
வருணன்
|
மக்கள்
|
சேர்ப்பன்,
புலம்பன், பரத்தி, நுழைச்சி,
கொண்கண், துறைவன், நுளையர்,
நுளைச்சியர், பரதர், பரத்தியர்,
அளவர், அளத்தியர்
|
புள்
|
கடற்காகம்,
அன்னம், அன்றில்
|
விலங்கு
|
சுறா,
உமண் பகடு
|
ஊர்
|
பாக்கம்,
பட்டினம்
|
நீர்
|
உவர்நீர் கேணி,
மணற்கேணி
|
பூ
|
நெய்தல்,
தாழை, முண்டகம், அடம்பம்
|
மரம்
|
கண்டல்,
புன்னை, ஞாழல்
|
உணவு
|
மீனும் உப்பும்
விற்று பெற்றவை
|
பறை
|
மீன்கோட்பறை,
நாவாய் பம்பை
|
யாழ்
|
விளரி யாழ்
|
பண்
|
செவ்வ்வழிப்பண்
|
தொழில்
|
மீன்பிடித்தல்,
உப்பு விளைத்தல், மீன் உணக்கல், பறவை ஓட்டுதல்,
கடலாடுதல்
|
நெய்தல் நிலத்தின் உரிப்பொருட்கள்
அக ஒழுக்கம் : இரங்கல்
அக ஒழுக்கம் : இரங்கல்
No comments:
Post a Comment