Wednesday, November 23, 2011

மருதம்



மருதம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என அழைக்கப்பட்டது. இதனால் மருத நிலத்தில் வாழ்ந்தோர் உழவுத் தொழில் புரிவோராவர். மருதநில மக்கள் மள்ளர் எனப்பட்டனர், மருத நிலத்தலைவர்கள் மகிழ்நன், ஊரன் என்று அழைக்கப்பட்டனர்.
"வேந்தன் மேய தீம்புனல் உலகமும்" (தொல்காப்பியம்). இவ்வாறு தொல்காப்பியம் மருதநில கடவுளாக வேந்தனை கூறுகிறது. ஆனால் பிற்கால நூல்கள் இந்திரனை மருதநில கடவுளாக கூறுகிறது. வேந்தனே ஆரிய கலப்பினால் இந்திரனாக மாறியிருப்பதாக தமிழ் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
"செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப "பிங்கல நிகண்டு. இவ்வாறு பிங்கல நிகண்டுமள்ளரை மருதநில மக்களாக கூறுகின்றது.
மதுரை என்ற பெயர் மருதை என்பதன் மருபுச் சொல் என பலர் கருதுகின்றனர்.
மருதநிலத்தைப் பற்றி முழுமையான தகவல்களை தரும் பிற்கால இலக்கியம் பள்ளு நூல்கள் ஆகும்.


மருத நிலத்தின் பொழுதுகள்: கார்கூதிர்முன்பனிபின்பனிஇளவேனில்முதுவேனில் என்னும் பெரும் பொழுதுகளும் வைகறைவிடியல் என்னும் சிறுபொழுதுகளும் மருத நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.
மருத நிலத்தின் கருப்பொருட்கள்

கடவுள்
வேந்தன் (இந்திரன்)
மக்கள்
ஊரன், மகிழ்நன்,கிழத்தி, மனைவி, உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்
புள்
வண்டானம், மகன்றில், நாரை, அன்னம், பெருநாரை, கம்புள், குருகு, தாரா.
விலங்கு
எருமை, நீர்நாய்
ஊர்
பேரூர், மூதூர்
நீர்
ஆற்று நீர், கிணற்று நீர்
பூ
தாமரை, கழுனீர்
மரம்
காஞ்சி, வஞ்சி, மருதம்
உணவு
செந்நெல் அரிசி, வெண்ணெல் அரிசி
பறை
நெல்லரிகிணை, மணமுழவு
யாழ்
மருத யாழ்
பண்
மருதப்பண்
தொழில்
விழாச்செய்தல், வயற்களைகட்டல், நெல் அரிதல், கடாவிடுதல், குளம் குடைதல், புது நீராடல்
மருத நிலத்தின் உரிப்பொருட்கள்
  அக ஒழுக்கம் : ஊடல்
புற ஒழுக்கம் : ஊழிஞை

No comments:

Post a Comment