Wednesday, November 23, 2011

குறிஞ்சி

குறிஞ்சி நிலம்

சேயோன் மேய மைவரை உலகமும்”. 
தொல்காப்பியம்.


குறிஞ்சியாவதுமலையும் மலைசார்ந்த இடங்களும், இயற்கை அழகும், வளங்களும் நிறைந்தனவாக, இளம் பருவத்தாரிடையே புணர்தலும் புணர்தல் நிமித்தமும் செல்லவும், இவைபற்றி எல்லாம் நினைக்கவும், அணுக்கரிடையே (தமக்கு நெருக்கமானவர்) தம் உணர்வை எடுத்து கூறவும் பொருந்துவனவாக அமைந்திருக்கும் நிலப்பகுதிகள். எனவே, தனித்து வேட்டை மேல் செல்லும் இளைஞனும், புனம் காத்து நிற்கும் கன்னியும் ஒருவரை ஒருவர் கண்டு காதலுற்று ஒன்றுபடுவதற்கு ஏற்ற நிலைக்களமாகி, இந்த துணிவு நிகழ்வதற்கு ஏற்ற வாழ்வியல் அமைந்தது குறிஞ்சி ஆகும். குறிஞ்சித்திணைக்கு கூதிர்காலம் மற்றும் முன்பனி காலம் பெரும்பொழுதுகளாகவும் யாமம் சிறுபொழுதாகவும் அமையும்.




குறிஞ்சியின் கருப்பொருட்கள்:
கடவுள்
முருகக்கடவுள்
மக்கள்
பொருப்பன், வெற்பன், சிலம்பன், குறத்தி, குறவன், கொடிச்சி, வெற்பன், வேம்பன், பொருப்பன்,கானவர்
புள்
கிளி, மயில்
விலங்கு
புலி, கரடி, யானை
ஊர்
சிறுகுடி
நீர்
அருவி நீர், சுனை நீர்
பூ
வேங்கை, குறிஞ்சி, காந்தள், குவளை
மரம்
ஆரம் (சந்தனம்), தேக்கு, அகில்ம் அசோகம், நாகம், மூங்கில்
உணவு
மலைநெல், மூங்கில் அரிசி, தினை
பறை
தொண்டகப்பறை
யாழ்
குறிஞ்சி யாழ்
பண்
குறிஞ்சிப்பண்
தொழில்
வெறியாடல், மலைநெல் விதைத்தல், தினைப்புனம் காத்தல் தேன் அழித்தல், நெல் குற்றுதல், கிழங்கு எடுத்தல், அருவி மற்றும் சுனை நீர் ஆடல்


முல்லை




முல்லை என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். செம்மண் பரந்திருத்தலால் முல்லை நிலமானது செம்புலம் எனவும் அழைக்கப்பட்டது. இந்நிலம் முல்லை மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது. கார் என்னும் பெரும் பொழுதும் மாலை என்னும் சிறுபொழுதும் முல்லை நிலத்துக்குரிய பொழுதுகளாகும். இந்நிலத்து ஆயர்களது வாழ்வியல், ஆடவர் ஆனிரை (பசுக்கள்) மேய்த்தற்கு பகற்பொழுது எல்லாம் காட்டிடத்தே இருத்தல், மகளிர் பால், பயன்களை விற்று வருதல் போன்ற ஒழுக்கத்தோடு ஒட்டியதாகும். ஏறு தழுவி வெல்பவனுக்கே மகளைத் தரும் வழக்கமும், அவனையே விரும்பி ஏற்கும் கன்னியர் மனமும் இத்திணையின் சிறப்பான மரபுகள். இதனால் காத்திருத்தல் தன்மை இயல்பாக, இருத்தல், இருத்தல் நிமித்தம். முல்லைத்திணைக்கு உரிமையாக்கி உள்ளனர்.

முல்லை நிலத்தின் கருப்பொருட்கள்

கடவுள்
மாயோன் (திருமால்)
மக்கள்
குறும்பொறை நாடன், தோன்றல், மனைவி, கிழத்தி, இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர், பொதுவர், பொதுவியர், கோவலர்
புள்
காட்டுக்கோழி
விலங்கு
மான், முயல்
ஊர்
பாடி, சேரி, பள்ளி
நீர்
குறுஞ்சுனை நீர், கான்யாற்று நீர் (காட்டாறு)
பூ
குல்லை, முல்லை, பிடவம், தோன்றிப்பூ
மரம்
கொன்றை, காயா, குருந்தம்
உணவு
வரகு, சாமை, முதிரை
பறை
ஏறுகோட்பறை
யாழ்
முல்லை யாழ்
பண்
முல்லைப்பண்
தொழில்
சாமை விதைத்தல், வரகு விதைத்தல், அவற்றின் களை கட்டல் மற்றும் அரிதல், கடா விடுதல், கொன்றை குழல் ஊதல், ஆவினம் மேய்த்தல், கொல்லேறு தழுவல், குரவை கூத்தாடல், கான்யற்று நீராடல்.

முல்லை நிலத்தின் உரிப்பொருட்கள்
அக ஒழுக்கம் : இருத்தல்
புற ஒழுக்கம் : வஞ்சி

மருதம்



மருதம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என அழைக்கப்பட்டது. இதனால் மருத நிலத்தில் வாழ்ந்தோர் உழவுத் தொழில் புரிவோராவர். மருதநில மக்கள் மள்ளர் எனப்பட்டனர், மருத நிலத்தலைவர்கள் மகிழ்நன், ஊரன் என்று அழைக்கப்பட்டனர்.
"வேந்தன் மேய தீம்புனல் உலகமும்" (தொல்காப்பியம்). இவ்வாறு தொல்காப்பியம் மருதநில கடவுளாக வேந்தனை கூறுகிறது. ஆனால் பிற்கால நூல்கள் இந்திரனை மருதநில கடவுளாக கூறுகிறது. வேந்தனே ஆரிய கலப்பினால் இந்திரனாக மாறியிருப்பதாக தமிழ் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
"செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப "பிங்கல நிகண்டு. இவ்வாறு பிங்கல நிகண்டுமள்ளரை மருதநில மக்களாக கூறுகின்றது.
மதுரை என்ற பெயர் மருதை என்பதன் மருபுச் சொல் என பலர் கருதுகின்றனர்.
மருதநிலத்தைப் பற்றி முழுமையான தகவல்களை தரும் பிற்கால இலக்கியம் பள்ளு நூல்கள் ஆகும்.


மருத நிலத்தின் பொழுதுகள்: கார்கூதிர்முன்பனிபின்பனிஇளவேனில்முதுவேனில் என்னும் பெரும் பொழுதுகளும் வைகறைவிடியல் என்னும் சிறுபொழுதுகளும் மருத நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.
மருத நிலத்தின் கருப்பொருட்கள்

கடவுள்
வேந்தன் (இந்திரன்)
மக்கள்
ஊரன், மகிழ்நன்,கிழத்தி, மனைவி, உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்
புள்
வண்டானம், மகன்றில், நாரை, அன்னம், பெருநாரை, கம்புள், குருகு, தாரா.
விலங்கு
எருமை, நீர்நாய்
ஊர்
பேரூர், மூதூர்
நீர்
ஆற்று நீர், கிணற்று நீர்
பூ
தாமரை, கழுனீர்
மரம்
காஞ்சி, வஞ்சி, மருதம்
உணவு
செந்நெல் அரிசி, வெண்ணெல் அரிசி
பறை
நெல்லரிகிணை, மணமுழவு
யாழ்
மருத யாழ்
பண்
மருதப்பண்
தொழில்
விழாச்செய்தல், வயற்களைகட்டல், நெல் அரிதல், கடாவிடுதல், குளம் குடைதல், புது நீராடல்
மருத நிலத்தின் உரிப்பொருட்கள்
  அக ஒழுக்கம் : ஊடல்
புற ஒழுக்கம் : ஊழிஞை