நன்னிலம்
நாம் நிலம்
நாம் நிலம்
நல்ல நிலம்
புதையலுள்ள புதிய களம்!
நம்மிலுள்ள விழுமியங்கள்
கண்ணிலுள்ள கண்ணீரல்ல
காய்ந்துபோக கரைந்துபோக – அது
அட்சயப்பாத்திரதிலுள்ள அமுதங்கள்
அழிந்துபோகா குறைந்துபோகா!
நன்னிலத்தில் எழுச்சிபெறும்
நல்லெண்ண விதைகள்
நானூறு மடங்காக – ஆனால்
தீயென்னா விதைகள்
தீய்ந்துபோம், அழிந்துபோம்!
நன்னிலங்களே புறப்படுவோம்!
புரட்சிசெய்ய – பசுமை
புரட்சிசெய்ய …
நன்மையினால் தீமையை வெல்ல
தீமையை வென்று நன்மை செய்ய.
சகோ. ஆக்னல்
சார்லஸ் OCD
No comments:
Post a Comment